Privacy Policy

பொது வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் - தனியுரிமைக் கொள்கை

இத் தனியுரிமை அறிக்கையனது, நீங்கள் எமது இணையத்தளமான www.slicgeneral.com இற்குள் நுழையும் போது Sri Lanka Insurance Corporation General Ltd ஆனது உங்கள் தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, வெளிப்படுத்துகிறது, பாதுகாக்கிறது என்பதை விளக்குகிறது. தரவுப் பாதுகாப்புச் சட்டங்களின் பொருந்தக்கூடிய ஏற்பாடுகளுக்கமைய, உங்கள் தரவின் தனியுரிமையைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்தத் தனியுரிமை அறிக்கையின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறீர்கள்.

  • I. பயன்பாட்டின் எல்லை / பொருந்தக்கூடிய வரம்பு

    கீழெ தரப்பட்டுள்ள தரவு பாதுகாப்பு அறிவிப்பானது, Sri Lanka Insurance Corporation General Ltd இன் இணையத்தளச் இணையவழித் தோற்றப்பாட்டினைப் பற்றியது. அத்துடன், இவ் இணையத்தளம் Sri Lanka Insurance Corporation General Ltd இன் விண்ணப்பத்திற்கான இணைப்புக்களையும் கொண்டுள்ளது.

  • II. உங்கள் தரவின் பயன்பாடு

    நீங்கள் எமது இணையத்தளத்திற்கு வருகை தரும்போது உங்கள் தனிப்பட்ட தரவு எவ்வாறு கையாளப்படும் என்பதையும், தரவுப் பாதுகாப்புச் சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள உங்கள் உரிமைகளை உங்களுக்குத் தெளிவாக உணர்த்துவதையும் கீழே எடுத்துரைத்துள்ளோம்.

    • A. தரவுப் பாதுகாப்பு அதிகாரியை தொடர்புகொள்ளல்

      தரவுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்
      Compliance Department
      08th Floor, Sri Lanka Insurance Corporation General Ltd
      No. 21, Vauxhall Street, Colombo 02
      Tele: +94 11 2357000
      E-Mail: email@srilankainsurance.com

    • B. நாங்கள் பயன்படுத்தவுள்ள தரவுப் பிரிவுகள், மற்றும் தனிப்பட்ட தரவை நாங்கள் என்ன கருமங்களுக்காக செயலாக்கவுள்ளோம்

      பொதுவாக, நீங்கள் எமது இணையத்தளத்தை அநாமதேயமாகப் பார்வையிடலாம், ஏனெனில் Sri Lanka Insurance Corporation General Ltd ஆனது தனது இணையத்தளத்திற்கு வருகை தருபவர்களின் தனிப்பட்ட அல்லது இனங்காணக்கூடிய எந்தத் தரவையும் (உதாரணமாக IP முகவரிகள்) பதிவுசெய்வதில்லை.

      இந்தத் தளத்திற்கு நீங்கள் வருகைதரும் போது, உங்கள் கணினி அல்லது சாதனம் பற்றிய சில தரவுகளை நாங்கள் தானாகவே பெறுகிறோம். குறிப்பாக, உங்கள் IP முகவரி, உலாவி/சாதன வகை, குக்கீகள்/பிக்சல் குறிச்சொற்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு, வருகைதந்த திகதி /நேரம் மற்றும் முன்பு பார்வையிட்ட வலைப்பக்கம் ஆகியவை அடங்கும். மேலும், உள்ளடக்கத்தின் வகை, பெயர் மற்றும் பார்க்கப்பட்ட நேரம் போன்ற இந்தத் தளத்தில் நீங்கள் பார்க்கும் வீடியோக்கள் அல்லது பிற உள்ளடக்கம் பற்றிய தரவையும் சேகரிக்கிறோம்.

    • C. சட்டக் கட்டமைப்பு

      நாங்கள் உங்கள் தரவை, 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம், 2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க கொடுப்பனவு சாதன மோசடிகள் சட்டம், அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள், 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றச் சட்டம் மற்றும் தனிப்பட்ட தரவுகளைச் செயலாக்குவதற்குப் பொருந்துகின்ற ஏனைய அனைத்துச் சட்டங்கள் ஆகியவற்றின் ஏற்பாடுகளின் அடிப்படையில் செயலாக்குகின்றோம்.

    • D. தரவுப் பயன்பாடு

      Sri Lanka Insurance Corporation General Ltd ஆனது அபாயங்களை மதிப்பீடு செய்யவும், உரிமைகோரல்களை ஆராயவும், சிறந்த காப்பீட்டுத் தீர்வுகளை வழங்கவும், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் வருங்கால வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்து செயற்படுத்துகிறது. சட்டம் அல்லது ஒழுங்குவிதிமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், காப்பீட்டு கணிப்பீடுகள் மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வுகளை மேற்கொள்ளுதல், புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்குதல், தரவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் உறவு முகாகைத்துவம் மற்றும் தவறான பயன்பாடுகளைத் தடுத்தல் போன்ற பிற காரணங்களுக்காகவும் தனிப்பட்ட தரவினைப் பயன்படுத்தப்படலாம். தனிப்பட்ட தரவுகள், முன் வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும், அவற்றோடு தொடர்புடைய விடயங்களுக்காகவும், அந்தத் தேவைகளுக்கு ஏற்பவும் மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும், சட்டரீதியான வலுவான காரணம் இருப்பதை உறுதி செய்த பின்னரே தனிப்பட்ட தரவுகள் செயலாக்கப்படும்.

      Sri Lanka Insurance Corporation General Ltd ஆனது தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே தனிப்பட்ட தரவை வெளிப்படுத்தும்:

      • (a) நிறுவனங்களின் குழுமத்திற்கு.
      • (b) சேவை பங்காளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கு.
      • (c) நிறுவனங்களின் இணைப்பு அல்லது கையகப்படுத்தல் போன்ற வணிக நடவடிக்கைகளின்போது வணிக பங்காளர்களுக்கு.
      • (d) ஒழுங்குமுறை மற்றும் சட்ட அமுலாக்க முகாமைகளுக்கு.
      • (e) முறையான இரகசிய காப்பு உடன்படிக்கைகளைக் கொண்டிருப்பதற்கு அமைவாக, மூன்றாம் தரப்பினரால் தரவுகளுக்கான களஞ்சிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
      • (f) ஆலோசணையாளர் மற்றும் பிற தொழில்முறை சேவை நிறுவனங்கள் (எங்கள் தணிக்கையாளர்கள், காப்பீட்டு கணிப்பாளர்கள் மற்றும் மறு காப்பீட்டாளர்கள் உட்பட).

      நாங்கள் தரவை, நிறுவனத்தின் இணையதளத்தை நிர்வகிக்கவும், உங்கள் பயனர் அனுபவத்தைத் தனிப்பயனாக்கவும், Sri Lanka Insurance Corporation General Ltd இன் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து உங்களைத் தொடர்புகொள்ளவும், விளம்பரப் பொருட்கள் மற்றும் சலுகைகளைப் பகிரவும் (ஒட்டுமொத்தமாக "சந்தைப்படுத்தல் தொடர்புகள்" என்று அழைக்கப்படுகிறது); நிறுவன பரிவர்த்தனைகள், தணிக்கைகள் மற்றும் தரவுப் பகுப்பாய்வு போன்ற எங்கள் உள் வணிக நோக்கங்களை நிறைவேற்றவும்; இந்தத் தளத்தைப் பயன்படுத்துவது மற்றும் எங்களுடனான உங்கள் தொடர்பு பற்றிய ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளை நடத்தவும்; புதிய தயாரிப்புகளை உருவாக்கவும்; இந்தத் தளம் மற்றும் எங்கள் இருக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தவும்; பயன்பாட்டு போக்குகளை அடையாளம் காணவும்; எங்கள் விளம்பரங்களின் செயல்திறனை மதிப்பிடவும்; எங்கள் விளம்பர பிரச்சாரங்களை மேம்படுத்தவும்; மற்றும் எங்கள் தகவல்தொடர்புகளின் திறனை தீர்மானிக்கவும் பயன்படுத்தலாம்.

  • III. குக்கீகள் மற்றும் ஏனைய இணையத்தள தொழிநுட்பங்கள்

    இந்தத் தளம் குக்கீகள் மற்றும் மூன்றாம் தரப்பு வழங்குநர்களிடமிருந்து குக்கீகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உட்பட ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இது சில அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளை இயக்கவும், இந்தத் தளம் மற்றும் எங்கள் சேவைகளை மேம்படுத்த எங்களுக்கு உதவும் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும் உதவுகிறது. இந்தத் தளம் அமர்வு குக்கீகளைப் (உங்கள் உலாவியை மூடும்போது காலாவதியாகும்) மற்றும் நிலையான குக்கீகளைப் (உங்கள் உலாவியை மூடிய பின் நீங்கள் அவற்றை நீக்கும் வரை அல்லது அவை காலாவதியாகும் வரை உங்கள் சாதனத்தில் இருக்கும்) பயன்படுத்தலாம். குக்கீகள் மூலம் உங்கள் சாதனத்திலிருந்து தரவு சேகரிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் மறுக்கலாம்.

  • IV. தரவுப் பாதுகாப்பு

    இணையம் வழியாகவோ அல்லது தரவு சேமிப்பகத்திலோ 100% பாதுகாப்பாக இருக்க முடியும் என்று உறுதியளிக்க முடியாது என்றாலும், அத்தகைய எந்தவொரு அபாயத்தையும் குறைக்க நியாயமான நடவடிக்கைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். தரவின் பாதுகாப்பை சமரசம் செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் கண்டால், மேலே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் தரவு பாதுகாப்பு அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

  • V. தனிப்பட்ட அறிவித்தல்களை மேம்படுத்தல்

    நாங்கள் இந்தத் தனியுரிமை அறிவித்தலை தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் மீளாய்வு செய்கிறோம்.