திருட்டுக்கான காப்புறுதி

திருட்டுக்கான காப்புறுதி

எமது திருட்டுக்கான காப்புறுதித் திட்டத்தின் மூலம் உங்கள் உடைமைகளுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திலிருந்து உங்களது வீடு மற்றும் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தனிக்குடித்தன வீட்டுகளுக்கு ஏற்ற இந்த விரிவான காப்புறுதித் திட்டமானது, உங்கள் வீடு மற்றும் மதிப்புமிக்க உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, உங்கள் பரபரப்பான வாழ்க்கை முறைக்கு எந்தவிதமான மன அழுத்தத்தையும் சேர்க்காமல் மன அமைதியை வழங்குகின்றது.

நியதிகளும் நிபந்தனைகளும்

    • கட்டிடம் பிரத்தியேகமாக ஒரு தனிப்பட்ட குடியிருப்பாக / வீடாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், ஏனைய நோக்கங்களுக்காகவோ அல்லது வீட்டுக் கைத்தொழிலுக்காகவோ பயன்படுத்தப்படக்கூடாது.
    • கட்டிடம் நல்ல நிலையில் பழுதுபார்க்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
    • செங்கற்கள் / கொங்க்ரீட் / சீமெந்துக் கற்கள் என்பவற்றைக் கொண்டு சுவர் எழுப்பப்பட்டிருப்பதுடன், கூரை பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
    • உபயோகத்தில் இல்லாதபோது அல்லது பகல், இரவாக இருந்தாலும் கதவு சரியாக பூட்டப்பட்டு சாவியிடப்பட்டிருத்தல் வேண்டும்.
    • ஜன்னல்கள், மின்விசிறி, மின்குமிழ் (fan,light) போன்றவை இரும்பு கிரில்/வலையால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அனுகூலங்கள்

சொத்து இழப்புக்களின் போது கிடைக்கும் காப்புறுதி பாதுகாப்பு

  • தளபாடங்கள், மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள், பெறுமதியான பொருட்கள், ஓவியங்கள், புராதன வஸ்துக்கள் போன்ற சொத்துக்கள் திருட்டு / வீடுடைப்பு மற்றும் களவு என்பவற்றின் காரணமாக இழக்கப்படும் பொழுது அவற்றுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு கிடைக்கின்றது.

சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்துக்கான காப்புறுதி பாதுகாப்பு

  • பலவந்தமாக பிரவேசித்தல் அல்லது வெளியேறுதல் அல்லது அத்தகைய ஏதேனும் முயற்சிகள் காரணமாக (பூட்டுகள், கதவுகள், யன்னல்கள் போன்ற) சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்துக்கான காப்புறுதி பாதுகாப்பு

இலகுவான தீர்ப்பனவு

  • ஈட்டுத்தொகை கோரிக்கைகளுக்கு மிகவும் வசதியான விதத்தில் தீர்ப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் செயன்முறை.

தகைமை

  • காப்புறுதிப் பத்திரதாரர் சொத்து தொடர்பான காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • இலங்கையின் சட்டத் தொகுப்பின் படி, காப்புறுதிப் பத்திரதாரர் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படும் சொத்துக்கள் / ஆதனங்கள் இலங்கையின் பூளோக எல்லைக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்