மோட்டார் பிளஸ் பெண்களுக்கு மட்டும்

மோட்டார் பிளஸ் பெண்களுக்கு மட்டும்

மோட்டார் பிளஸ் பெண்களுக்கு மட்டும் என்பது SLIC ஜெனரலால் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் விரிவான மோட்டார் காப்புறுதித் தீர்வாகும். இத் திட்டம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் மன அமைதியை உறுதி செய்து, குறிப்பாக பெண் ஓட்டுநர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கிற அம்சங்களை வழங்குகிறது,

பெண்களுக்கான பிரத்தியேக நன்மைகள்

Call and Move வசதி

    வாகனப் பழுது அல்லது விபத்து நடந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு உங்கள் வாகனத்தை நகர்த்துவதற்கு உதவியைப் பெறுங்கள்.

அவசரகால தங்குமிடச் செலவுகளைத் திருப்பிச் செலுத்துதல்

  • வீட்டிலிருந்து வெகு தொலைவில் வாகன விபத்து காரணமாக சிக்கித் தவித்தால் தங்குமிடச் செலவைத் திருப்பிச் செலுத்துதல் .

விசுவாசமான வெகுமதிகள்

தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

  • வலையமைப்புப் பங்காளர்கள் மூலம் சேவைகள் மற்றும் கொள்முதல் மீது தள்ளுபடிகளை அனுபவியுங்கள்.

ஏனைய அனுகூலங்கள்

கள ஆய்வு

  • விபத்து ஏற்பட்டால், துல்லியமான கோரிக்கை கையாளுகை மற்றும் விரைவான தீர்வுகள் என்பவற்றை உறுதிசெய்து சேதத்தை மதிப்பிடுவதற்கும், பழுதுபார்க்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கும் SLIC ஜெனரல், கள ஆய்வை வழங்குகிறது.
  • 3 வேலை நேரங்களுக்குள் கோரிக்கைகளை திருப்பிச் செலுத்துதல்

  • ஒரு சம்பவத்திற்குப் பிறகு குறைந்தபட்ச இடையூறுகளை உறுதி செய்து விரைவான செயலாக்கம் மற்றும் கோரிக்கைகளை திருப்பிச் செலுத்துதல்.
  • கட்டுப்படியாகக்கூடிய காப்பீட்டுக் கட்டுப்பணங்கள்

  • பணத்திற்கான மதிப்பை வழங்கும் போட்டித் தன்மையான கட்டுப்பண விகிதங்கள், மலிவானதும் விரிவானதுமான காப்பீடு என்பதை உறுதிப்படுத்துகிறது.
  • நெகிழ்வான கட்டணத் திட்டங்கள்

  • பல்வேறு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டண முறைகளுடன் கட்டுப்பணங்களை உங்கள் நிதி வசதிக்கு ஏற்ற நெகிழ்வான தவணைகளில் செலுத்தலாம்.
  • ஒன்லைனில் புதுப்பியுங்கள்

  • நேரத்தையும் முயற்சியையும் மீதப்படுத்தும் வகையில், எமது வாடிக்கையாளர் போர்ட்டல் மூலம் ஒன்லைனில் உங்கள் மோட்டார் இன்ஷூரன்ஸ் காப்புறுதித் திட்டத்தை புதுப்பிப்பதற்கான வசதி.
  • துல்லியமான மற்றும் விரைவான கோரிக்கைத் தீர்வுகள்

  • சிரமத்தை குறைக்க கோரிக்கைகளின் விரைவான தீர்வை உறுதிசெய்யுங்கள்.
  • இலவச தனிப்பட்ட விபத்துக் காப்பீடு

  • காப்புறுதித் திட்டத்தின் மதிப்பை மேம்படுத்தும் வகையில் பாராட்டுக்குரிய தனிநபர் விபத்துக் காப்பீட்டுடன் காணப்படுகின்றது.
  • Air Bag இற்கான காப்பீடு

  • விபத்து காரணமாக Air Bag இனைமாற்றியமைக்க குறிப்பிட்ட பாதுகாப்பு
  • SLIC ஜெனரல் பார்ட்னர் கரேஜ்களில் வாகனங்களை பழுதுபார்த்தல்

  • தொந்தரவில்லாத அனுபவத்திற்காக கட்டணமில்லா பழுதுபார்க்கும் வசதிகளுடன் கூடிய உயர்தர பழுதுபார்ப்பு சேவைகளுக்கான SLIC ஜெனரல் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர் கேரேஜ்களை அணுகுங்கள்.
  • கட்டணமில்லா பழுதுபார்க்கும் வசதி

  • முற்பணம் செலுத்தாமல் பழுதுபார்ப்பதற்கு வசதியாக வலையமைப்பின் கீழ் கேரேஜ்களுடன் நேரடித் தீர்வு.
  • SLIC ஜெனரல் பார்ட்னர் கேரேஜ்களில் இருந்து பலன்களை அனுபவியுங்கள்

  • தரம் மற்றும் நம்பகமான பழுதுபார்ப்புக்களை உறுதிசெய்து, அங்கீகரிக்கப்பட்ட கேரேஜ்களின் பரந்த வலையமைப்பில் சிறப்பு கட்டணங்கள் மற்றும் சேவைகளில் இருந்து பயனடையுங்கள்.
  • தகைமை

    • செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் வேண்டும்
    • காப்புறுதிதாரரின் பெயரில் வாகனம் பதிவு செய்யப்படல் வேண்டும் அல்லது முதன்மையாக காப்புறுதிதாரரால் இயக்கப்படல் வேண்டும்
    • காப்புறுதி செய்யப்படுபவர் ஒரு பெண்ணாக இருத்தல் வேண்டும்
    • 18 வயதுக்கு மேற்பட்ட வயது வந்தவர்கள் காப்புறுதித் திட்டத்தைப் பெறலாம்
    • இலங்கையின் சட்டவாக்கக் கட்டமைப்பின்படி காப்புறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு காப்புறுதிதாரர் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
    • காப்புறுதி செய்யும் வாகனங்கள் இலங்கையின் புவியியல் எல்லைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்

    *நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.

    இந்த வடிவமைக்கப்பட்ட காப்புறுதிக் கொள்கையானது, தனது மோட்டார் காப்புறுதியில் இருந்து பாதுகாப்பு மற்றும் வசதி ஆகிய இரண்டையும் நாடும் நவீன பெண்களுக்கு ஏற்றதாகும்.

    அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்