மோட்டார் பிளஸ் ட்ரைவ் 60

மோட்டார் பிளஸ் ட்ரைவ் 60

மோட்டார் பிளஸ் ட்ரைவ் 60 என்பது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் காப்புறுதித் திட்டமாகும், இது அவர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் பலன்களை வழங்குகிறது. இத் திட்டமானது மூத்த ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்பையும் வசதியையும் உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் மன அமைதியையும் வழங்குகிறது.

அனுகூலங்கள்

இலவச இழுவைக் காப்பீடு

  • ஒரு நிகழ்வுக்கு ரூ.10,000/- மதிப்புள்ள காப்பீட்டுடன் காப்பீடு செய்யப்படும் நிகழ்வுக்கு இலவச இழுவைச் சேவை.

கோல் மற்றும் மூவ் வசதி

  • பழுதடைந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ வாகனத்தைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்ய உடனடி உதவி.

கட்டணமில்லா பழுதுபார்க்கும் வசதி

  • SLIC ஜெனரல் அங்கீகாரம் பெற்ற வாகனம் திருத்தும் கேரேஜ்களில் உடனடி செலவுகள் இன்றி பழுதுபார்த்தல்களை மேற்கொள்ள முடியும்.

Bee எக்ஸ்பிரஸ் சலுகைகள்

  • ரூபா.100,000 இற்கும் குறைவான கோரிக்கைகள் மதிப்பீட்டின் உடன்பாட்டின் பின்னர் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தீர்க்கப்படும்.

பழுதுபார்ப்புக்குப் பிந்தைய ஆய்வைத் (ARI) தள்ளுபடி செய்தல்

  • சிறிய பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு ஆய்வுக்கான தேவையைத் தள்ளுபடி செய்வதன் மூலம் விரைவான கோரிக்கைச் செயலாக்கத்தை எளிதாக்குகிறது.

சிறப்பு பழுதுபார்ப்புச் சலுகைகள்

  • நெட்வொர்க் கேரேஜ்களில் தள்ளுபடிகள் மற்றும் சிறப்புச் சேவைகள் ஆகியவை உள்ளடங்கிய நன்மைகள்.

காப்புப் பாகங்களைத் தள்ளுபடி செய்தல்

  • இழப்பீடு ரூ.50,000/-க்கும் குறைவாக இருந்தால் காப்புறுதிதாரர் மீட்புப் பாகங்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

மேலதிக காப்பீட்டுத் தெரிவுகள்

கவர்ச்சிகரமான கட்டுப்பணங்கள்

  • காப்பீடு மலிவானதும் விரிவானதுமாகும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பணங்கள்.
  • மருத்துவமனைகளில் இருந்து தள்ளுபடித் தொகுப்புகள்

  • நெட்வொர்க் மருத்துவமனைகளில் மோட்டார் விபத்துக்கள் தொடர்பான மருத்துவச் சிகிச்சைகளுக்கான தள்ளுபடிகள் அடங்கும்.
  • தகைமை

    • வேண்டப்படும் வயது: 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்குக் கிடைக்கும்.
    • காப்புறுதிதாரருக்கான தேவைகள்: செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பதோடு வாகனம் அவர்களின் பெயரில் பதிவு செய்யப்படல் வேண்டும் அல்லது முதன்மையாக அவர்களால் இயக்கப்படல் வேண்டும்.

    இந்தத் திட்டமானது மூத்த ஓட்டுநர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் ஓட்டுநர் அனுபவத்தையும் சாலையில் பாதுகாப்பையும் மேம்படுத்த பல்வேறு சேவைகள் மூலம் விரிவான ஆதரவையும் வழங்குகிறது.

    *விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

    அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்