வீட்டுப் பாதுகாப்பு லைட் திட்டம் (Home Lite)

வீட்டுப் பாதுகாப்பு லைட் திட்டம் (Home Lite)

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல், உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட கடைசி இழப்பு அடிப்படையிலான புதிய வீட்டுக் காப்புறுதித் திட்டமான ஹோம் புரொடெக்ட் லைட் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்தக் காப்புறுதியானது, உங்களுக்கு ஐந்து குறிப்பிட்ட தொகுப்புகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குவதுடன், இது 1 மில்லியன் முதல் 5 மில்லியன் LKR வரை பாதுகாப்பை வழங்குகிறது, இவை அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கும்.

காப்புறுதித் தொகுப்புக்கள் / திட்டங்கள்

காப்புறுதித் தொகுப்புக்கள் / திட்டங்கள் வருடாந்த கட்டுப்பணம் (வரிகளுடன்)
விருப்பத் தேர்வு 01: 1மி இல. ரூபா 1,900
விருப்பத் தேர்வு 02: 2மி இல. ரூபா 2,500
விருப்பத் தேர்வு 03: 3மி இல. ரூபா 3,400
விருப்பத் தேர்வு 04: 4மி இல. ரூபா 4,300
விருப்பத் தேர்வு 05: 5மி இல. ரூபா 5,300

** காப்புறுதி நியதிகள், நிபந்தனைகள் மற்றும் விலக்குகளுக்கு உட்பட்டதுடன், இது நிலையான காப்புறுதிப் பாலிசியின்படி இருக்கும்.

அனுகூலங்கள்

தீ / மின்னல் தாக்குதல்

நபர் ஒருவரால் / நபர்களால் வேண்டுமென்றே சேதம் விளைவித்தல்

திடீர் வெடிப்பு

சூறாவளி / புயல் / அதி வெப்பம் / வெள்ளப் பெருக்கு / நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கை அபாயங்கள்

மின்சாரக் கசிவு (மின்சாரம் மற்றும் மின்னணுப் பொருட்களுக்கு மட்டும்)

நீர்த் தாங்கிகள் வெடித்தல் மற்றும் மேலதிக நீர் வெளியேற்றம், கருவிகள் மற்றும் குழாய்கள்

விமானங்களினால் ஏற்படுத்தப்படும் சேதம்

தாக்க சேதங்கள்

ஈட்டுத்தொகை கோரிக்கைகளை மிகவும் இலகுவான விதத்தில் மேற்கொண்டு கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

முக்கிய காரணிகள்

இணையவழி கொள்முதல் வசதி

எளிதான கோரிக்கைத் தீர்வு முறை

காப்புறுதியின் ஆரம்பத்தில் பொருட்களின் பட்டியலைத் தெரிவிக்க வேண்டியதில்லை.

உடனடியாக பாலிசியை வாங்கும் திறன்

மலிவு பிரீமியங்கள்

குறைந்த ஆவணங்கள் மற்றும் விரைவான சேவை வழங்கல்.

தகைமை

  • காப்புறுதிப் பத்திரதாரர் சொத்து தொடர்பான காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • இலங்கையின் சட்டத் தொகுப்பின் படி, காப்புறுதிப் பத்திரதாரர் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படும் சொத்துக்கள் / ஆதனங்கள் இலங்கையின் பூளோக எல்லைக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
  • இந்த காப்புறுதியின் அடிப்படையாக இருக்கும் அபாய விவரங்களை முழுமையாக வெளிப்படுத்துவது அவசியம்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்