ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் பிஸ்னஸ் கிளப்

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் பிஸ்னஸ் கிளப்

"ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் பிஸ்னஸ் கிளப் " வர்த்தகக் காப்புறுதியானது இலங்கை வணிகங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்காக மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் நிறுவனத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய விரிவான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய காப்பீட்டுத் தீர்வை வழங்குகிறது. உங்கள் இடர்களை ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரலிடம் ஒப்படைப்பதன் மூலம், உங்கள் மனதை கவலைகளிலிருந்து விடுவித்து, உங்கள் வணிகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும்.

All Property Insurances

அனுகூலங்கள்

முக்கிய காப்பீடுகள்

  • தீ மற்றும் இடி, மின்னல் தாக்குதல்
  • கலவரம், வேலைநிறுத்தம்
  • வேண்டும் என்றே சேதம் விளைவித்தல்
  • திடீர் வெடிப்பு
  • சூழல் காற்று, புயல், அதிக வெப்பம் மற்றும் வெள்ளப்பெருக்கு
  • நிலநடுக்கம்
  • இயற்கை அனர்த்தம்
  • விமானங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் சேதம்
  • மோதலினால் ஏற்படும் சேதம்
  • நீர் தாங்கிகள் வெடித்தல் மற்றும் மேலதிக நீர் வெளியேற்றல்
  • தன்னிச்சையான எரிதல்
  • மின்சாரத் தாக்கம்
  • திருட்டு
  • சிதைவுப் பொருட்களை அகற்றல்
  • வாடகை இழப்பு
  • கட்டிடக் கலைஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆலோசனைகளுக்கான கட்டணம்
  • மாற்றுத் தங்குமிடம்
  • தற்காலிக நீக்கம்
  • தீயை அணைக்கும் உபகரணங்கள்
  • பொது அதிகாரிகள்
  • *மேலே உள்ள அனைத்து முதன்மைக் காப்பீடுகள், மேலதிகக் காப்பீடுகள் மற்றும் இலவசக் காப்பீடுகள் அனைத்தும் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டன.

மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புக்கள் (இலவசம்)

  • வேலை வழங்குனருக்கான தனிநபர் விபத்துக் காப்பீடு (ரூ. 200,000 வரை. மேலதிக கட்டுப்பணத்தில ரூபா 4,000,000/= வரை நீடித்தல் விருப்பத்திற்குரியது)
  • 2 பணியாளர்களுக்கான தனிநபர் விபத்துக் காப்பீடு (ஒவ்வொருவருக்கும் ரூ. 50,000 வரை. ஒவ்வொருவருக்கும் ரூபா 1,000,000/= வரை நீடித்துக்கொள்ள முடியும்)
  • உணவு நஞ்சாக்கலினால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீடு (ரூபா. 100,000 வரை)
  • WCI (வேலையில் இல்லாத நேரத்தின் போதான காப்பீடு உட்பட) 5 ஊழியர்கள் வரை
  • சேவை வசதி அமைப்புகளுக்கான சேதம் (ரூபா 100,000)
  • கொள்ளையின் காரணமாக பூட்டை மாற்றியமைத்தல் (ரூ.15,000)

மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புக்கள் (கட்டுப்பணம்)

  • போக்குவரத்தின் போதான பணக் காப்பீடு
  • டிராயரில் (வணிக நேரங்களில் மற்றும் வணிக நேரத்திற்குப் பிறகு)
  • ஸேஃபில்
  • தற்செயலாக கண்ணாடி உடைதலுக்கான காப்பீடு
  • சமிக்ஞைப் பலகைக்கான காப்பீடு
  • மின்னணு உபகரணங்களுக்கான காப்பீடு
  • போக்குவரத்தில் உள்ள பொருட்களுக்கான காப்பீடு
  • இயந்திர செயலிழப்புக்கான காப்பீடு
  • குளிர்சாதன பெட்டிகள் / ஆழக் குளிர்சாதனப் பெட்டிகளில் உணவு கெடுதல்
  • நம்பக உத்தரவாதக் காப்பீடு
  • சட்டப் பொறுப்புக் காப்பீடு
  • தனிப்பட்ட விபத்துக் காப்பீடு (தொழில் வழங்குனர் / 02 பணியாளர்கள்/ மேலதிக பணியாளர்கள்)
  • இறுதிச் சடங்குச் செலவுகள்
  • தொழிலாளர் இழப்பீட்டுக் காப்பீடு (5 ஊழியர்களுக்கு மேல்)
  • காப்பீடு செய்தவருக்கும் வணிகப் பங்காளருக்குமான மருத்துவமனைக் பண நன்மைகள்.

தகைமை

  • காப்புறுதிதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டவாக்கக் கட்டமைப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படும் சொத்து/ ஆதனங்கள் இலங்கையின் புவியியல் எல்லைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்