ஒப்பந்ததாரர்களின் பொறித் தொகுதி மற்றும் இயந்திரங்கள் தொடர்பான காப்புறுதி

ஒப்பந்ததாரர்களின் பொறித் தொகுதி மற்றும் இயந்திரங்கள் தொடர்பான காப்புறுதி

கட்டுமானத் திட்டங்களின் போது பொறித் தொகுதி மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் ஒப்பந்தக்காரர்களுக்காக இந்த சிறப்புக் காப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கட்டுமான வேலை முழுவதும் சீரான செயல்பாட்டுத் தொடர்ச்சியை உறுதி செய்து, சொத்துக்கள் வேலைத்தளத்தில் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு வகையான அபாயங்களுக்கு எதிராக காப்பீட்டை வழங்குகிறது.

All Property Insurances

அனுகூலங்கள்

முக்கிய காப்பீடு:

    இக் காப்புறுதித் திட்டமானது வெளிப்புற காரணங்களால் ஏற்படும் தற்செயலான சேதத்தை ஈடுசெய்து, கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொறித் தொகுதி மற்றும் இயந்திரங்களுக்கு காப்பீட்டை வழங்குகிறது. காப்பீடு செய்யப்படும் இயந்திரங்கள்:

    • பெகோ லோடர்கள் (Backhoe Loaders)
    • மண் தோண்டும் கருவிகள், பாரந்தூக்கும் இயந்திரங்கள் மற்றும் போக் லிப்ட்கள்
    • கட்டுமான வேலையில் பயன்படுத்தப்படும் ஏனைய இயந்திராதிகள்

தகைமை

  • காப்புறுதிதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டவாக்கக் கட்டமைப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படும் சொத்து/ ஆதனங்கள் இலங்கையின் புவியியல் எல்லைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.

இக் காப்பீட்டுத் திட்டமானது கட்டுமானத் திட்டங்களுக்குத் தேவையான முக்கிய சொத்துக்களைப் பாதுகாத்து ஒப்பந்தக்காரர்களுக்கு விரிவான இடர் மேலாண்மையை வழங்குவதற்கான பரந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது.

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்