வணிகப் பணிமனைகளுக்கான காப்புறுதி

வணிகப் பணிமனைகளுக்கான காப்புறுதி

கைத்தொழில் / வணிகப் பணிமனைகளுக்கான இலவசக் காப்புறுதியானது வணிகக் கட்டிடங்கள், அலுவலகங்கள், உற்பத்திக்கூடங்கள் மற்றும் கிடங்குகளுக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீ, திருட்டு, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து ஆபத்துகளிலிருந்தும் முழுமையான பாதுகாப்பை இந்தக் காப்புறுதி வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் வணிகம் எந்தவித இடையூறுமின்றி தொடர்ந்தும் செயல்பட முடியும்.

All Property Insurances

காப்புறுதி / பாதுகாப்பு

அடிப்படைப் பாதுகாப்பு

    தீ மற்றும் மின்னல் தாக்கங்களிலிடருந்து பாதுகாப்பு வழங்குதல்.

விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு (கூடுதல் கட்டணத்தில் கிடைக்கும்)

    • கலவரம் & வேலை நிறுத்தம்
    • வேண்டுமென்றே சேதம் விளைவித்தல்
    • வெடிப்பு
    • விமானச் சேதம்
    • உட்சார்ந்த சேதம்
    • சுழல்காற்று / புயல் / கொந்தளிப்பு / வெள்ளம்
    • பூகம்பம் / நிலநடுக்கம் ( தீ மற்றும் அதிர்வு உள்ளடங்கலாக)
    • நீர்த்தாங்கிகள் வெடித்து வழிந்தோடுதல்
    • மின்சாரக் கூடுதல்
    • இயற்கை அழிவுப் பாதுகாப்பு
    • பயங்கரவாதம் / தீவிரவாதம்
    • தன்னிச்சையான எரிப்பு
    • கொள்ளைக் காப்பு

தகைமை

  • காப்புறுதிதாரர் சொத்தின் மீது காப்பீடு செய்யக்கூடிய ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • இலங்கையின் சட்டவாக்க கட்டமைப்புக்கு ஏற்ப, காப்புறுதிதாரர் காப்புறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தகுதி உடையவராய் இருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படுகின்ற சொத்துக்கள்/உடைமைகள் இலங்கையின் புவியியல் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளைச் சமாளிக்க வணிக உரிமையாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த விரிவான காப்புறுதித் தொகுப்பு வலுவான பாதுகாப்பையும் மன அமைதியையும் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்