மோட்டார் வாகனத் தொகுதிக்கான காப்புறுதித் தீர்வுகள்

மோட்டார் வாகனத் தொகுதிக்கான காப்புறுதித் தீர்வுகள்

மோட்டார் வாகனத் தொகுதிக்கான காப்புறுதித் தீர்வுத் திட்டமானது விபத்துக்கள் மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாத்து நிறுவன வாகனத் தொகுதிகளுக்கு முழுமையான மற்றும் செலவு குறைந்த காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குகிறது. இத் திட்டமானது உங்கள் மதிப்புமிக்க வாகனத் தொகுதியின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. தனிப்பயனாக்கப்பட்ட காப்பீடுகள் உங்கள் வாகனத் தொகுதிகளின் தேவைகள் மற்றும் செயல்பாடுகளைப் பூர்த்தி செய்ய துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருகின்றன.

அனுகூலங்கள்

சிறப்பு காப்பீட்டுத் தவணைக் கட்டணங்கள்

  • தொகுதியில் உள்ள வாகன அளவைப் பொறுத்து, நீங்கள் சிறப்பு காப்பீட்டு கட்டுப்பணங்களைப் பெறலாம்.

துல்லியமான செலுத்தல்கள்

    மொத்த காப்பீட்டுக் கோரிக்கைகள் குறைந்தபட்ச ஆவணங்களுடன் துல்லியமாக செலுத்தப்படுகின்றன.

கள ஆய்வு

    விபத்துச் சேதங்களின் கள ஆய்வானது 175 இற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அலுவலர்களைக் கொண்ட எங்கள் குழுவினால் உடனடியாக விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, பழுதுபார்க்கும் பணிக்கான ஒப்புதலை வழங்குவதற்காக எங்கும், எந்த நேரத்திலும் விபத்துச் சேதத்தை மதிப்பிடுகின்றது.

இதனுடன் மேலதிக கட்டுப்பணத்திற்கு விரிவாக்கப்படக்கூடியது:

    • தனிப்பட்ட விபத்துக் காப்பீடு (காப்புறுதிதாரர் / சம்பளதாரி ஓட்டுநர் / பயணிகள்)
    • குத்தகை / வாடகை காப்பீடு
    • சட்டப்பூர்வ பொறுப்புக் காப்பீடு (பயணிகளுக்காக)
    • போக்குவரத்துப் பொருட்களுக்கான காப்பீடு
    • மேம்படுத்தப்பட்ட இழுவைக் கட்டணங்களுக்கான காப்பீடு
    • பயிற்சி ஓட்டுநர் / இருசக்கர ஓட்டுநருக்கான காப்பீடு
    • ஓட்டுநர் கல்விக் காப்பீடு
    • தொழிலாளர்கள் இழப்பீட்டுக் காப்புறுதி (ஓட்டுநருக்காக)
    • சிறப்பு விண்ட்ஸ்கிரீன் காப்பீடு
    • வேலைநிறுத்தம், கலவரம் மற்றும் சிவில் கலவரக் காப்பீடு
    • பயங்கரவாதக் கப்பீடு

தகைமை

  • நிறுவனக் கூட்டமைப்பு / நிறுவனம் வாகனத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • நிறுவனக் கூட்டமைப்பு / நிறுவனம், இலங்கையின் சட்டவாக்கக் கட்டமைப்பின் படி காப்பீட்டு ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்கு தகுதியானவராக இருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி வாகனம்/ வாகனங்கள் இலங்கையின் புவியியல் எல்லைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.

ஏதேனும் வரையறைகள், நியதிகள், நிபந்தனைகள் மற்றும் மேற்குறிப்பிட்ட காப்புறுதித் திட்ட நன்மைகளின் விலக்குகளுக்கு காப்புறுதித் திட்ட ஆவணத்தை அல்லது காப்புறுதித் திட்ட அட்டவணையைப் பார்க்கவும்.

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்