வேலையாட்கள் நட்டஈடுச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு
- சட்ட இணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து, விதித்துரைக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
SLIC பொது வேலையாட்கள் நட்டஈட்டுக் காப்புறுதியானது, இறுதியாக திருத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க வேலையாட்கள் நட்டஈடுச் சட்டத்திற்கு இணங்க வலுவான பாதுகாப்பை வழங்குகிறது. இத் திட்டமானது, பணியின் போது காயமடைந்த வேலையாட்களுக்கு நட்டஈடு வழங்குவதை உறுதி செய்து, தொழில் வழங்குநரின் பொறுப்புகளை ஈடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ் செலுத்தத்தக்கதாக வரையறுக்கப்பட்ட மாதாந்த சம்பளத்தின் அதிகபட்ச வரையறைக்கமைய முப்பது நாட்களுக்கான மாதாந்த சம்பளம் அல்லது தற்காலிக உடல் இயலாமைக் கொடுப்பனவு (வாரமொன்றிற்கான அதிகபட்சத் தொகை ரூபா. 15,000 என்பதோடு பணம் செலுத்தும் அதிகபட்ச கால அவகாசம் 26 வாரங்களாகும்)